தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும் தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்படி மே 12ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்று விடைத்தாள் நகல்களை பள்ளிகள் மூலமாக பெற மே 13ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.