தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் நாளை அதாவது ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் முழுவதும் திறக்கப்பட இருக்கிறது. முன்னதாக ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திங்கள் கிழமை திறக்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு நாளை கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கல் முன்கூட்டியே அனைத்து பள்ளிகளிலும் நாளை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.