
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை கிடையாது என சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது சமூக வலைதளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் தகவல்களில் எந்த உண்மையையும் கிடையாது என்பதால் அதனை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து முறையான அறிவிப்புகள் வெளிவரும். எனவே சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை யாரும் நம்பவோ அல்லது மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் தேர்வு முடிவுகள் குறித்து சோசியல் மீடியாவில் வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.