முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 500 மாணவர்கள், 500 மாணவிகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை மாதம் 1000 என ஆண்டுக்கு 10000 (ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள்) வழங்கப்படும். அறிவாற்றல், கல்வியில் திறமையுள்ள மாணவர்களை அடையாளம் காண, ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

நிலையில் ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ள திறனாய்வுத் தேர்வுக்கு, அரசுப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஜூன் 21-26 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.