
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதுகிறார்கள். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதுகிறார்கள். இன்று மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்கும் நிலையில் பதட்டம் இல்லாமல் பயமில்லாமல் நிதானமாக தேர்வினை எழுதுமாறு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஆளுநர் ரவி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பொது தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு அரசு தேர்வு துறை ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று நடைபெறும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை மாணவர்கள் நேர்மையாக எழுத வேண்டும். பொது தேர்வில் ஆள்மாராட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது. அதன் பிறகு தேர்வு அறைக்கு காப்பி அடிக்கும் எண்ணத்தில் மாணவர்கள் செல்லக்கூடாது அடிக்கடி பறக்கும் படையினர் சோதனைக்கு வருவார்கள். மேலும் ஆள் மாறாட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் 3 வருடங்களுக்கு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.