தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த நிலையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் திட்டங்களின் அடிப்படையில் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்கள், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்கள் இடம்பெறும். 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.