உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் தற்போது சொன்ன ஒரு விஷயம் சர்சியாக மாறியுள்ளது. அதாவது மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து அதில் படுத்து தூங்கினால் புற்றுநோய் சரியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது தினசரி மாட்டுத் தொழுவத்தை நன்றாக சுத்தம் செய்து அங்கு படுத்து தூங்கி வந்தால் புற்றுநோயிலிருந்து விரைவில் முழுமையாக நலம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதேபோன்று மாடுகளை காலை மற்றும் மாலை என இரு வேளைகளும் தடவி கொடுத்தால் 10 நாட்களில் ரத்த அழுத்த பிரச்சனை சரியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு மாட்டு கொட்டகை திறப்பு விழாவின்போது அமைச்சர் இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ள நிலையில் அது சர்ச்சையாக மாறி உள்ளது.