ரூ.835 கோடி பட்ஜெட்டில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா: தி இன்ட்ரோடக்‌ஷன்’ திரைப்படம் தற்போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதில் ராமராக நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்துத்துவ அமைப்பினர் சிலர், “மாட்டுக்கறி சாப்பிடுபவர் ராமராக நடிக்கலாமா?” என கேள்வியெழுப்பி, அவருக்கு எதிராக சைபர் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.

படத்தில் ரன்பீர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்களாக ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசைஞர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும், அதன் முதல் பாகம் 2026 தீபாவளியில், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

இந்நிலையில், ரன்பீர் கபூருக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த நாட்டில் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பாபாஜி கூட ஓட்டுக்காக ஜாமினில் வெளிவர முடியும். ஆனால் ஒருவர் சாப்பிடும் உணவே இந்துத்துவ அமைப்புகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதனைக் தொடர்ந்து, கடந்த காலத்தில் இந்துத்துவ அமைப்புகள், படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி மீது அவர் அசைவம் சாப்பிடுவதாக கூறி விமர்சனம் செய்ததையும் ரசிகர்கள் நினைவுபடுத்தி வருகின்றனர்.