ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ – பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது . இதற்கிடையில் 2025 ஐபிஎல் போட்டிக்கு முன்பாக லக்னோ ஜெயண்ட்ஸ் அணியின் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ரிஷப் பண்ட் பேசியபோது, “எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது. அது என்னவென்றால் பஞ்சாப் அணியிடம் அதிகமான ஏலத் தொகை இருந்தது.

பஞ்சாப் அணிக்கு சென்றால் நான் லக்னோ அணியால் எடுக்கப்படுவேன் என்று நினைத்தேன். எங்கே பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டு விடுவேனோ என்று நினைத்தேன்.  அதனால் ஏலத்தை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பஞ்சாப் அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவிய பிறகு ரிஷப் பண்டை கேலி செய்யும் விதமாக “ஏலத்திலேயே  பதட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக பஞ்சாப் கிங் அணி பதிவிட்டுள்ளது.