
அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான ஜிகி ஹடிட் தனியார் விமானம் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேமென் தீவுக்கு சென்றுள்ளார். அப்போது ஓவன் ராபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க உபயோகிக்கப்படும் கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து மாடல் அழகியான ஜிகி ஹடிட்டும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தலா 1000 டாலர் அபராதம் செலுத்தியுள்ளனர்.