தென் கிழக்கு வங்க கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அது தற்போது  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும். அதன் பிறகு 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் இன்று நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.