
தற்போது பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைக்காலங்களில் பொதுவாக சிறுவர் சிறுமிகள் மொட்டை மாடிகளில் மலையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பல நாட்களாக வறட்சி நிலவி வந்த நிலையில் முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்துள்ளது. அப்போது சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் மழையில் நடந்தபடி விளையாடி கொண்டிருப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வீட்டின் கூரை மீது மின்னல் ஒன்று தாக்கியது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படாமல் நொடியில் உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள் மழை பெய்யும் பொழுது வெட்டவெளிகள், மரங்களின் கீழ் அல்லது மொட்டை மாடியில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்..
Lightning Strikes are Real:
Take adequate care when you are in the midst of a thunder Storm. Standing under a tree or lamppost, Rain dance on Terrace etc is very dangerous.
Source: @TimesNow pic.twitter.com/oV1rRYBMWK
— Namma Karnataka Weather (@namma_vjy) June 26, 2024