இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே விலங்குகள் மற்றும் பறவைகளின் பாச போராட்டம் காண்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதனை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கிளிகள் இரண்டு மலையில் நனைந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்று மழைக்கு ஒதுங்கியுள்ளது. மற்றொரு கிளி நனைந்து கொண்டிருந்ததை பார்த்து மீண்டும் வெளியே வந்து அதனை நனையாமல் பாதுகாக்கிறது. இந்த வீடியோவில் கிளிகளின் பாச போராட்டம் மனிதர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் கூட இவ்வாறு தற்போது நடந்து கொள்வதில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை.