தொடர் வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள யானைகள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அசாமில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள இடத்தை நீர் ஆக்கிரமித்து உள்ளதால் அங்கிருக்கும் யானைகள் மேட்டு நிலத்தை நோக்கி ஓடுகின்றன. சுமார் 15 லட்சம் விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

6 காண்டாமிருகங்கள் மற்றும் 94 மான்கள் உட்பட 114 விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளது. காசிரங்கா தேசிய பூங்கா மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கே உள்ள யானைகள் மேட்டு நிலப்பகுதியில் ஏரி உயிர் தப்பி உள்ளன. தொடர் வெள்ளம் காரணமாக யானைகள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.