
தமிழ்நாடு மருத்துவப் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50 சதவீதம் இடங்கள் உள் ஒதுக்கீடாக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிட்ட சில துறைகளில் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி நடப்பு ஆண்டு முதல் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை எண் 151ஐ மருத்துவத்துறை வெளியிட்டது.
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. 50 சதவீதம் இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையில் 15 படிப்புகள் நீக்கப்பட்டது. இந்த சூழலில் அரசு மருத்துவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரை அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.