கர்நாடக மாநிலம் நிரலகி கிராமத்தில் தேவலசாப் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபினா என்ற மனைவி இருக்கிறார். இதில் தேவலசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தெரிந்த நிலையில் அவர்கள் மாயமான வாலிபரை வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையில் அந்த கிராமத்தில் ஒரு வாலிபரின் மண்டை ஓடு உட்பட சில எலும்புக்கூடுகள் சிக்கியது. இது மாயமான தேவசலாப் எலும்புக்கூடுகள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தற்போது அவருடைய மனைவியின் உறவினர்களான தனீப் பக்வான், அலிசாப் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அலிசாப்பின் மருமகளுடன் தேவலசாப் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தேவலசாப் மற்றும் அவர் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுடைய கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் அவருடைய மனைவியின் உறவினர்கள் மற்றும் அலிசாப் ஆகியோர் வாலிபரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அலிசாப் அவருடைய மனைவி தனீப் பக்வான் ஆகியோர் வாலிபரை சம்பவ நாளில் அடித்துக் கொன்றனர். பின்னர் அவருடைய உடலை குழி தோண்டி புதைத்தனர். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.