பாம்பு ஒன்று பாட்டிலை விழுங்கி அதை வெளியே கக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது நபர் ஒருவர் அதாவது பாம்பு ஹெல்ப்லைன் தன்னார்வலர்கள் மீட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  மக்கள் பயன்படுத்திய பாட்டில்களை  குப்பையாக கண்ட கண்ட இடங்களில் தூக்கி வீசி வருகிறார்கள். அவை சில நேரங்களில் விலங்குகளுக்கு உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.

அந்த வகையில் சுற்றுலா செல்லும் போது மது குடித்துவிட்டு வீசி எரிந்து உடைக்கும் மதுபாட்டில்கள் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் கால்களில் குத்தி காயத்தை ஏற்படுத்தி அவற்றின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகிறது.  இதே போல தான் இப்படி வீசப்பட்ட சிரப் பாட்டிலை பாம்பு ஒன்று விழுங்கி உயிருக்கு போராடும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.