
சென்னை கொளத்தூரில் முகமது அலி (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா தயாரிப்பாளர். இவர் அயனம்பாக்கம் பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்தப் பெண் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்த நிலையில் தற்போது அம்பத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் முகமது அலி தனக்கு திருமணமானதை மறைத்து என்னை காதலித்து வந்தார்.
அவர் குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோவாக செல்போனில் எடுத்து வைத்துள்ளார். நான் கர்ப்பமான நிலையில் சத்து மாத்திரைகள் என்று கூறி எனக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்தார். அதோடு அவர் பாலியல் பலாத்காரம் செய்யும் போது எடுத்த வீடியோவை வைத்து என்னை மிரட்டுவதோடு இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என கூறுகிறார். அதோடு ரூ.5 லட்சம் பணம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணின் குற்றசாட்டுகள் உண்மை என தெரிய வந்தததையடுத்து முகமது அலியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.