ஒடிசா மாநிலத்தில் ரேஷ்மா என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவருடைய தலையில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதாவது ரேஷ்மா அவருடைய தாயின் மரணத்திற்கு பின் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் மன கஷ்டம் தீர அவர் ஒரு சாமியாரை அணுகியுள்ளார்.

அந்த சாமியார் பிரச்னையை சரி செய்வதாக கூறி ரேஷ்மாவின் தலையில் 77 ஊசிகளை இறக்கியுள்ளார். இந்த ஊசிகள் அனைத்தும் ரேஷ்மாவின் எலும்புகளை பாதிக்காமல் சதையில் இறங்கியுள்ளது. இதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். கடும் தலைவலியால் ரேஷ்மா அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது தலையில் ஊசி இருப்பது தெரிய வந்தது. இதனால் தற்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாமியாரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.