
‘தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசன், “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என தெரிவித்தார்.
நடிகர் கமலின் பேச்சால் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த வழக்கில் இன்று 2.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகயுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அன்பு மன்னிப்பு கேட்காது. உலகறிந்த உண்மையை சொன்னார். இருவருக்கும் உள்ள உறவை சொன்னார். அன்பை சொன்னதற்கு மன்னிப்பா? சத்தியம் தலை வணங்காது. என போஸ்டர் ஒட்டப்பட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.