
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கரும்புள்ளி மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய பல வருடங்களாக திட்டம் திட்டி வருகிறது. பலமுறை அவர் மீது கொலை முயற்சி தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் தற்போது இந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, என்னுடைய மகன் சல்மான்கான் இதுவரை ஒரு கரப்பான் பூச்சியை கூட கொன்றதில்லை. நான் என் மகனிடம் கேட்டேன். அவர் என்னிடம் நான் கரும்புள்ளி மானை வேட்டையாடி கொல்லவில்லை என்று கூறினார்.
என் மகன் என்னிடம் பொய் சொல்ல மாட்டார். எங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்த ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அப்போது அதை நினைத்து சல்மான் கான் கண்ணீர் விட்டார். விலங்குகள் மீது அவர் மிகுந்த அன்பு கொண்டவர். பொழுதுபோக்கிற்காக விலங்குகளை வேட்டையாடக் கூடியவர் கிடையாது. மேலும் தவறு செய்யாத போது நடிகர் சல்மான் கான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாஜக கட்சியின் முன்னால் எம்பி ஒருவர் கரும்புள்ளி மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதற்காக பிஷ்னோய் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது சல்மான் கான் தந்தை இப்படி ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்