
திருமணத்திற்கு பின்னர் சமூகப் பொறுப்பை தவிர ஆண்கள் தங்களுடைய மனைவியின் பெயரில் சில சலுகைகளை பெற முடியும். அதாவது திருமணமான பெண்ணின் கல்வி கற்கும் ஆசையை ஈடேற்ற சிலர் விரும்புவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பலரும் கல்வி கற்க கல்வி கடனை சார்ந்து உள்ளனர்.
அப்படி இருக்கையில் கல்வி கடன் வாங்கினால் பெரும் தள்ளுபடி பெறுவதற்கு கடன் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது. அதாவது மனைவியின் மேற்படிப்புக்காக வங்கியில் கடன் வாங்கினால் பெரும் தள்ளுபடி பெற முடியும். இது வருமான வரி விதிகளின் பிரிவு 80 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது