கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.

சமீபத்தில் பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சசிகலா தனது கணவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 30-ஆம் தேதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக சசிகலாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாஸ்கரை பிடித்து விசாரித்த போது வெளிப்படும் தகவல் தெரிய வந்தது.

அதாவது பாஸ்கர் சசிகலாவை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சும்பாவம் நடந்த அன்று கணவன் மனைவி இருவரும் அவரது மது குடித்தனர்.

பின்னர் பாஸ்கர் சசிகலாவின் கை கால்களை கட்டி போட்டு உடலுறவு ஈடுபட்டுள்ளார். மேலும் சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து உடலுறவில் ஈடுபட்ட போது மூச்சு திணறி இறந்ததாக நடக்கமாடியுள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.