உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ராவஸ்தியில், 31 வயதான சைஃபுதீன் என்ற நபர், தனது மனைவி சாபினாவை கொலை செய்து, தனது குற்றத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் தகவலின்படி, சாபினாவின் உடல் பகுதிகளை 10 கிலோமீட்டர் தூரத்துக்கு சிதறடித்து வீசியுள்ளார். சில பகுதிகள் கால்வாயிலும் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மே 14 அன்று சாபினாவின் சகோதரர் சலாஉத்தீன் செல்போனில் அழைத்தார். அப்போது அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. அதே நாளில் அவர் வீட்டிற்கு சென்றபோது தம்பதியர் லக்னோவுக்கு சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

ஆனால் அன்றைய தினமே மாலை நேரம் சைஃபுதீன் நடமாடிக் கொண்டிருப்பதை ஐந்த சலாஉத்தீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் சைஃபுதீன் முதல் இரண்டு நாட்கள் தவறான தகவல்கள் வழங்கினார். பின்னர் தீவிர விசாரணையின் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவரது வாக்குமூலத்தில், சாபினாவின் ஒரு கையை எரித்து, அருகிலுள்ள தோட்டத்தில் புதைத்ததாகவும் தெரிவித்தார். போலீசார் அந்த எரிந்த கைப்பகுதியை மீட்டுள்ளனர். சாபினாவின் குடும்பத்தினர் கூறுகையில், திருமணத்திற்குப் பிறகு சைஃபுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக்காக சாபினாவை துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

“அவனை நம்பி வாழ வந்தாள். ஆனால் வரதட்சணைக்காக கொலை செய்தான்,” என சலாஉத்தீன் வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது சைஃபுதீன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.