
உத்திரபிரதேச மாநிலத்தில் ரோஹா மாவட்டத்தில் தர்மேந்திர சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரை போலீசார் கைது செய்தனர். தர்மேந்திர சிங் குடிக்க தண்ணீர் கேட்டபோது போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்தனர். இதனால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தர்மேந்திர சிங்கின் சகோதரர் கூறியதாவது, இரண்டு தரப்பினர் சண்டை போட்டதால் தர்மேந்திர சிங் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் போலீசார் அவரையே கைது செய்தனர்.
அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது போதையில் இருந்த போலீசார் தர்மேந்திரசிங்கை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அது மட்டும் இல்லாமல் ஆசிட் குடிப்பதற்கு முன்பு போலீசார் எனது சகோதரனை கடுமையாக தாக்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.