
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டில் உள்ள பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் விஷம் சேர்க்கப்பட்ட உணவின் மூலம் 19 தெருநாய்கள் மர்மமாக உயிரிழந்தன. வழக்கம்போல் வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர்.
அதே நேரத்தில், விலங்குகள் நல வாரியத்தினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சேர்ந்து இறந்த நாய்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனையில், உணவுகளில் விஷம் கலந்து கொன்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.