உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் ஒரு பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இங்கு இருவர் ஒரு வாலிபரின் சடலத்தை துணியால் மூடிக்கொண்டு பின்னர் இரு கால்களையும் பிடித்துக் கொண்டு தரதரவனை இழுத்து அந்த பிரேத பரிசோதனை கூடத்திற்குள் நுழைகிறார்கள்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சடலத்தை இழுத்து சென்றவர்கள் ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.