பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட இவர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு திருச்சூருக்கு சென்ற சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அவர் மந்திரி பதவி வகிக்க எனக்கு விருப்பமில்லை .நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு செய்யக்கூடிய பணிகள் அதிகம் இருக்கிறது. கேரளா மக்களுக்கான திட்டத்தை நான் கொண்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட மந்திரிகள் அதை செயல்படுத்த வேண்டும். அதை தான் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.