
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் சுற்று எண்ணிக்கையில் 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 1996 முதல் திமுகவின் ஆதிக்கம் தான்.
முரசொலி மாறன் 1996, 1998, 2001 என தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி இது. முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில் தயாநிதி மாறன் 2006, 2009, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2014ஆம் ஆண்டு மட்டுமே இங்கு அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் 2019இல் தயாநிதி வெற்றிபெற்றார்.