100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க கோரி திமுக சார்பில் வருகிற 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட ஏழை ஆண்-பெண் தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.