மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு அகவிலை படியை உயர்த்தும்போது மாநில அரசுகளும் அகவிலை படியை உயர்த்துகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையை ‌ முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இதனால் 53% வரை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 3 சதவீதம் வரை மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அடுத்த வருடம் மார்ச் மாதம் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் 53 சதவீதத்திலிருந்து 56 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.