மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி நிலுவை தொகை விரைவில் வர இருக்கிறது. அதுமட்டுமின்றி மிகப்பெரிய சம்பள உயர்வும் வரவுள்ளதாக ஊழியர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த இரண்டு அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டால் புத்தாண்டு நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு அது மிகப்பெரிய பரிசாக அமையும். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகையை நான்கு சதவீதம் உயர்த்தியது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இது பெரிய உயர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பிட்மன் காரணி உயரம் குறித்து எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. ஆனால் இதற்கான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை. 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி பாக்கி மத்திய அரசு விரைவில் வழங்க இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது நிபுணர்களின் எதிர்பார்ப்பு மட்டுமே. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டால்தான் எவ்வளவு உயர்வு என்று தெரிய வரும்.