மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தின் கீழ், 18 வகை ஓபிசியினருக்கு 5 சதவீத வட்டி மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை கிடைக்கிறது. இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும்.

தச்சர்கள், படகோட்டிகள், கொல்லர்கள், இரும்புக் கருவிகள் தயாரிப்பாளர்கள், பூட்டு தொழிலாளிகள், குயவர்கள், தோல் பதனிடுபவர்கள், கொத்தனார்கள், சிலை தயாரிப்பாளர்கள், முடி திருத்துபவர்கள், மலர் மாலைகள் செய்பவர்கள், தையல்காரர்கள், எம்பிராய்டரிகள், வலை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 18 முக்கிய பாரம்பரிய தொழில் கலைஞர்கள் இந்தக் கடன்களுக்குத் தகுதியானவர்கள்.