
சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது தான் நமது நாட்டுக்கு நல்லது. பல்வேறு மாநகரங்களில் மோடிக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது வாக்கு மூலம் அதனை நிரூபிக்க வேண்டும் என்றார்.