உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மதர்சா ஒன்று செயல்பட்டு வந்துள்ளது இந்த மதர்சாவில் 14 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் வைத்து புகை பிடித்ததாக கூறி இஸ்லாமிய மத போதகர் ஆஸ் மொஹமத் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதர்சாவில் தூங்கிக் கொண்டிருந்த மத போதகரின் கழுத்தை சிறுவன் கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளான்.

இதில் காயமடைந்த ஆஸ் முகமது சத்தம் போட மற்ற மாணவர்கள் வந்து பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மதர்சா செயல் பட்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதர்சாவை பூட்டி சீல் வைத்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் மத போதகர் ஆஸ் முகமதின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆஸ் முகமதின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.