பணியாளர் தேர்வு ஆணையம் மற்றொரு பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்பு முடித்த 18 – 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 3 முதல் மே 3 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.