
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மொத்த மாநிலமும் கலவர பூமி ஆனது. பல கொடூர சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரனபானந்தா தாஸ் என்ற எழுத்தாளர் “மணிப்பூர் பைல்ஸ்” என்ற புத்தகத்தை மணிப்பூர் வன்முறையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.
இதனால் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே பகைமையை வளர்க்க முயற்சிப்பதாக கூறி கேகேஎல் என்ற சிவில் அமைப்பின் இளைஞரணி தலைவர் பிரனபானந்தா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வன்முறையின் ஒரு பக்கத்தை மட்டுமே எழுத்தாளர் விவரிப்பதாகவும் இதனால் ஒரு பக்க சார்புடன் வன்முறை சித்தரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் எழுத்தாளர் பிரனபானந்தா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.