கர்நாடக மாநிலம் மைசூர் சாம்ராஜநகரை‌ சேர்ந்தவர் சையது சரூன். இவரிடம் ஹயாபூசா என்ற‌ ஒரு‌ நியூ மாடல் பைக் உள்ளது. இந்த பைக் மணிக்கு 300 முதல் 312 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும் சையது இந்த பைக்கில் மிக அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக் மீது சையது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளார்.

அந்த பைக்கில் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் கார்த்திக் என்ற நபர் ஓட்டி சென்றுள்ளார். ஆனால் சையது மோதிய வேகத்தில் கார்த்திக் சென்ற பைக் சிறிது தூரம் இழுத்துச் சென்று பைக்கில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது சையதுவின் கட்டுப்பாட்டை இழந்த பைக் வெடித்து சிதறியதில் அவருக்க பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையதுவை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சையது – விற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சையதுவின் பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்ததால் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தெரியவந்தது.