
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பராசியா சாலையின் வந்தனா லான்-2 பகுதியில், ஒரு திருமண விழா திருமணத்திற்கு சில மணிநேரங்கள் முன் பரிதாபமாக முடிந்தது. மணமகள் மண்டபத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு, திருமண ஊர்வலத்திற்காக காத்திருந்த நிலையில், மணமகன் அரவிந்த் சூர்யவன்ஷி திடீரென காணாமல் போனார். காலை 8 மணி முதல் புல்வெளியில் இருந்த மணமகள் தரப்பினர், மதியம் 12 மணிக்கு நடக்கவிருந்த திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தபோது, மணமகன் தனது தாயின் மொபைல் மூலம் அழைத்து, “நீங்கள் புதிய கார் கொண்டு வந்தால் தான் நான் வருவேன்” என கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
திருமண ஊர்வலம் இரவு 9 மணி வரை வராததால், மணமகள் தரப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் தற்போது கிராமப்புற காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது. பொறுப்பாளர் ஜி.எஸ். ராஜ்புத் தெரிவித்ததாவது, மணமகன் தரப்பிற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது என்றும் கூறினார். மணமகளின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கும், சமூக அவமதிப்புக்கும் ஆளாகியுள்ளனர். “புதிய கார் கேட்டு திருமணத்திற்கு வராமலிருப்பது முற்றிலும் தவறான செயல். இது நமது நற்பெயருக்கும் பெரும் சேதம்,” என உறவினர்கள் கூறினர். இருப்பினும் மணமகன் மனம் இறங்கவில்லை. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.