
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பரபரப்பான சாலையில், ஓடும் காரின் மேல் சாகசம் செய்த புதுமண ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகன் ஒருவர் கார் மீது நடனமாடும் காட்சியும், மணமகள் கார் பானட்டில் அமர்ந்து “இஷ்க் கி கலி விச் நோ என்ட்ரி” பாடலை பாடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குவாலியரின் புதிய ரயில்வே மேம்பாலம் (ROB) அருகே. சம்பவ நேரத்தில் சாலை மிகவும் நெரிசலாக இருந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த ஜோடியின் ஆபத்தான செயலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வைரலான வீடியோவின் அடிப்படையில், MP07 ZH-0835 என்ற எண்ணைக் கொண்ட காரை போலீசார் அடையாளம் கண்டதுடன், அதன் உரிமையாளர் சிரோல் தரிகேதா ஜாக்ரா சாலையில் வசிப்பவர் என்று உறுதி செய்யப்பட்டது.
In Gwalior, a bride and groom violated traffic rules in order to go viral. A video of the groom doing stunts with a sword on the car and the bride dancing on the bonnet is becoming increasingly viral on social media#MadhyaPradesh #MetGala #MetGala2025 #MetGala2025xFREEN #Stunt pic.twitter.com/JrBfc58JTB
— TodaysVoice ImranSayyed (@todaysvoice24nz) May 6, 2025
இந்த சாகசம் குறித்து கோலா கா மந்திர் போக்குவரத்து காவல் நிலைய பொறுப்பாளர் சுபேதார் அபிஷேக் ரகுவன்ஷி, இது மிகுந்த பொறுப்பற்ற செயல் என்றும், மணமகன், மணமகளின் உயிருக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாலே சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இத்தகைய செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.