இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் வீடியோக்கள் பாராட்டுக்குரியதாகவும் சில வீடியோக்கள் விமர்சனத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகரில் அப்சல் மற்றும் அர்மோன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இவர்களின் திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது உறவினர்கள் வானத்தில் பண மழையை பொழிந்தனர். அவர்கள் மாடியில் நின்றவாறு பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் உங்களிடம் நிறைய பணம் இருந்தால் அதனை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமே என்று கூறி வருகிறார்கள். சிலரோ ஏழை ஜோடிகளுக்கு இந்த பணத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் திருமண ஊர்வலத்தில் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 20 லட்ச ரூபாயை உறவினர்கள் அள்ளி அள்ளி வீசிய நிலையில் அது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.