ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்தில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த பத்தாம் தேதி இந்த இளம் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணப்பெண் திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.

அந்த பெண்ணின் தாத்தா தனது பேத்தியிடம் விசாரித்தார். அப்போது சூரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் போது ஜீஷன் என்ற நபர் தன்னை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் இளம்பெண் கூறியுள்ளார். அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தகாத உடலுறவு வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் ஜீசனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்திவிட்டார்.

ஆனாலும் விடாமல் ஜீஷஸ் இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீ வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என மிரட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து மணமகனின் தந்தைக்கு தான் எடுத்த ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். அதனை பார்த்து ஷாக்கான மனமகனின் தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டார். இது குறித்து இளம்பெண் நடித்த புகாரின் பேரில் ஜீஷன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.