தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று 47-வது பிறந்தநாள் விழா. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனை எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதாக விமர்சித்திருந்தனர். இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் எனவும் பிளக்ஸ் பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதோடு ஏழை எளிய மக்களுக்கு அவர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று கூட கட்டணம் எதுவும் இல்லாமல் 21 ஜோடிகளுக்கு திமுக சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி ஆடம்பரம் என்று கருத முடியும். பார்ப்பவர் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது அனைத்துமே மஞ்சளாகத்தான் தெரியும். மேலும் எங்கள் தலைவர் பாணியில் சொல்லவேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலை கிடையாது அதனால் அறிக்கை வெளியிடுகிறார் என்று கூறினார்.