சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் விஜயகுமார் என்பவரை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். அதாவது விஜயகுமார் நண்பன் என்ற முறையில் மச்சான் என அழைத்துள்ளார்.

ஆனால் அருண்குமார் தனக்கு இரண்டு தங்கைகள் இருப்பதால்தான் விஜயகுமார் மச்சான் என அழைத்ததாக நினைத்து தன்னுடைய வீட்டிற்கு அவரை வரவழைத்து தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.