அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டும்தான் தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் 6 மத விருப்பங்கள் மட்டுமே படிவங்களில் சேர்க்கப்படுகிறது. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவிலுள்ள இயற்கையை வணங்கும் ஆதிவாசிகள் தங்களது சர்னா மதத்தை தனி மதமாக சேர்க்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரம் கர்நாடகாவின் லிங்காயத்துகளும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உண்மையில் கடந்த 2011-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மதத்திற்கான விரிவான குறியீடுகளை வடிவமைத்து உள்ளனர். எனினும் அவை கைவிடப்பட்டு புள்ளிவிபரங்கள் பயனர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பிறகு இறுதி அட்டவணையில் 6 மதக் குறியீடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.