
இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் பொதுமக்கள் காண்பதற்கு இலவசமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்காக வாகனங்களில் டாய்லெட் வசதி போன்றவைகளை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிறகு விவேகானந்தா ஸ்பாட்டுக்கு எதிர்தி சையில் இருந்து பார்த்தால் சாகச நிகழ்ச்சி தெளிவாக பார்க்கலாம் என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காண்பதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மழை மற்றும் வெயில் இரண்டுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் குடை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை பொதுமக்கள் கையில் எடுத்துச் செல்வது நல்லது.