
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த அளவு மழையின் தேவை இருக்கிறது. அதிகமாக பெயரால் அதை சமாளிக்கக்கூடிய தைரியம் அரசுக்கு உள்ளது. மலையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். அதிக மழை பெய்தால் அரசு அதை சமாளிக்கும் என பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.