இன்றைய காலகட்டத்தில்பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. பல பொய்யான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை மக்களும் நம்பி ஏமாந்து விடுகிறார்கள். அந்தவகையில் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வவுச்சரை வழங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசின் PIB FactCheck பதிலளித்துள்ளது. இது இந்தியன் ஆயில் தொடர்பான திட்டம் அல்ல, அதிர்ஷ்டக் குலுக்கல் போலி என்பது தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதற்காக தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது