தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தற்போது மின் கணக்கீடு செய்யும் நிலையில் அதனை மாதந்தோறும் கணக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால் இதுவரை இன்னும் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் தற்போது மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் தற்போது ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பணிகள் நிறைவடைந்த உடன் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.