கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வந்த நிலையில் தற்போது வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யவுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி. பெரம்பலூர். மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.